/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : மே 15, 2025 11:39 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கடலுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ஞானசேரகன் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேரகன், மாவட்ட விவசாய அணி தலைவர் வைத்திலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றிய அவைத்தலைவர் சாரங்கபாணி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர் அணி பாண்டுரங்கன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு கடுமையாக உழைத்து வருகிறார். தமிழகத்தில் மகளிருக்கு கடந்த 20 மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் மட்டும் 4 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்தில் 34,987 பேர் பயனடைகின்றனர்' தலைமை கழக பேச்சாளர்கள் முத்துபாண்டி, அங்கையற்கண்ணி பேசினர்.
ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், ஜோதி, சிவபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் துரைராஜ், மாவட்ட பிரதிநிதி மணிமாறன், அண்ணாதுரை, இலக்கிய அணி வேல்முருகன், ஒன்றிய பொருளாளர் செல்வம் பங்கேற்றனர்.