ADDED : செப் 14, 2025 01:04 AM

நடுவீரப்பட்டு : கடலுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடுவீரப்பட்டில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன் வரவேற்றார். அவைத் தலைவர் சாரங்கபாணி, தலைமை கழக செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட விவசாய சங்க தலைவர் வைத்திலிங்கம், ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.
வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தீவிர களப்பணியாற்றுவது.
கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், ஜோதி, சிவபெருமாள், ஒன்றிய பொருளாளர் செல்வம், ஒன்றிய விவசாய அணி பாண்டுரங்கன், பன்னீர், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, இளைஞர் அணி சதீஷ்குமார், ஸ்டாலின், வர்த்தக அணி செல்வராசு, நெசவாளர் அணி பன்னீர்செல்வம், தனவேல், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.