/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காவல்துறை வாகனங்கள் எஸ்.பி., மாதாந்திர ஆய்வு
/
காவல்துறை வாகனங்கள் எஸ்.பி., மாதாந்திர ஆய்வு
ADDED : செப் 14, 2025 01:06 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் காவல்துறை வாகனங்களை, எஸ்.பி.,ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஜீப், பைக் உள்ளிட்ட வாகனங்களை மாதந்தோறும் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்வது வழக் கம். அதன்படி நேற்று, கடலுார் தேவனாம்பட்டினம் புறக்காவல் நிலையம் அருகில் காவல்துறை வாகனங்களை மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவி, முதலுதவிப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் சரியாக இயங்குகிறதா என, சோதனை செய்தார்.
ஆயதப்படை டி.எஸ்.பி., அப்பாண்டை ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.