/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : பிப் 14, 2026 04:01 AM

வேப்பூர்: தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை 8:45 மணியளவில், கழுதுார் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் நடக்கிறது.
இதில், அமைச்சர் நேரு தலைமை தாங்குகிறார். அமைச்சர் கணேசன் வரவேற்கிறார். தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால கிருஷ்ணன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் தண்டபாணி, மாவட்ட துணைச்செயலர்கள் தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் பாவாடை கோவிந்தசாமி, வெங்கட்ராமன், ராஜவன்னியன் முன்னிலை வகிக்கின்றனர். தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

