ADDED : மே 21, 2025 02:49 AM
தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தி.மு.க.., தலைமை பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக கடந்த 4 ஆண்டுகளில் அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதற்காக ஆங்காங்கே பொதுக்கூட்டம் நடத்துமாறு கட்சித் தலைமை அதிரடி உத்தரவிட்டது.
அதன்படி, போக்குவரத்து இல்லாத பகுதியில் கூட்டம் நடத்தினால் ஆளுங்கட்சிக்கு கூட்டம் கூடுவது குறைவாக இருக்கும் எனக் கருதி கடந்த வாரம் கடலுார் ஆல்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, பொதுக்கூட்டம் நடந்த இடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த 3 தி.மு.க., பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது.
ஆளுங் கட்சியாக இருந்தும், கண்கூசும் ஒளி வெள்ளத்தில் பேனர் கிழிக்கப்பட்டது என்றால் கட்சிக்குள் அந்தளவு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
உள்ளூர் தி.மு.க., பிரமுகர்கள், கடைமட்டத்தில் உள்ள வார்டு செயலாளர்கள், கட்சிக்காரர்களை மதிப்பதில்லை, யாரிடமும் கலந்து ஆலோசிப்பதில்லை என, கட்சியினர் மத்தியில் பெரும் புகைச்சல் இருந்து வருகிறது. நீருபூத்த நெருப்பாக இருந்த இந்த விரோதம் பொதுக் கூட்டம் நடந்த போது வெளிப்பட்டிருக்கலாம் என்கின்றனர் எதிரணி தி.மு.க., வினர்.