sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தே.மு.தி.க., மாநாடு துளிகள் டாஸ்மாக் கடைகள் மூடல்

/

 தே.மு.தி.க., மாநாடு துளிகள் டாஸ்மாக் கடைகள் மூடல்

 தே.மு.தி.க., மாநாடு துளிகள் டாஸ்மாக் கடைகள் மூடல்

 தே.மு.தி.க., மாநாடு துளிகள் டாஸ்மாக் கடைகள் மூடல்


ADDED : ஜன 10, 2026 07:06 AM

Google News

ADDED : ஜன 10, 2026 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் குழு-: பணம் கேட்டால் என்ன தப்பு விழுப்புரம் மா.செ., உடைப்பு

விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசுகையில், 'இந்த மாநாட்டிற்கு 15 கோடிக்கு மேல் செலவாகியிருக்கும். ஆனால், அனைவரும் தங்களது ரத்தத்தை வியர்வையாக்கி சம்பாதித்த பணத்தில் வந்துள்ளனர். யாரிடமும் பணம் பெறவில்லை. அப்படியே கேட்டால் என்ன தவறு, அண்ணி மன்னிக்கவும்.

யூடியூப்புகளில் சிலர் தாறுமாறாக விமர்சனம் செய்கின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு கட்சிகளையும் கேட்கிறேன். 5 ஆண்டுகள் கொள்ளையடிக்கிறீர்களே... உங்களிடத்தில் பணம் கேட்டால் என்ன தப்பு. ஆட்சிக்கு வந்தால் தான் மட்டுமே பதவி நிலைக்கு என எடப்பாடியின் நிலை உள்ளது. ஆனால், இன்னும் நான்கு மாநாடுகள் போட்டாலும் இந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்கும்' என கூறி கொள்கிறேன்.

வாடிய சுதீஷ் முகம்

மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் பேசும்போது பொதுச் செயலாளர் பிரேமலதா பெயரை மட்டும் கூறிவிட்டு பேசுங்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பலரும் இளைஞரணி செயலாளரான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பெயரை கூறிச் சென்றனர். இதனால் கட்சியின் பொருளாளர் என்ற பதவியில் இருந்தும், ஒருவர் கூட தனது பெயரை கூறவில்லையே என சுதீஷ் முகம் வாட்டமாக காணப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் தாமதமாக மூடல்

தே.மு.தி.க., மாநாடு குறித்து கடந்த மாதம் விருத்தாசலத்திற்கு வந்தபோது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பு கொடுத்திருந்தார். இருப்பினும் நேற்று மாலை 5:00 மணி வரை, விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி பகுதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் திறக்கப்பட்டிருந்தன.

இதனால், தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் மதுஅருந்திவிட்டு, வாகனங்களில் தாறுமாறாக சென்றனர். அதன்பின், அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், ராமநத்தம், ஆவட்டி சாலை டாஸ்மாக் கடைகள், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மதுக்கூடம், வேப்பூர் தனியார் மதுபானக் கூடம், சர்வீஸ் சாலை டாஸ்மாக், விருத்தாசலம் சாலை டாஸ்மாக் உட்பட விருத்தாசலம் நகரில் இருந்த அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டன.

மதுபானங்களை முன்பே விற்றுத் தீர்ந்து விட்டதால், மூடுவதுபோல மூடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து விட்டது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us