தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

 தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

 தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்


ADDED : பிப் 16, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேப்பூர்: வேப்பூர் அடுத்த கழுதுாரில் கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் நேரு தலைமை தாங்கினார்.

தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால கிருஷ்ணன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் தண்டபாணி, மாவட்ட துணை செயலர்கள் தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் பாவாடை கோவிந்தசாமி, வெங்கட்ராமன், ராஜவன்னியன் முன்னிலை வகித் தனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் வரவேற்றார். இதில், தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், சின்னசாமி, அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலர் பரமகுரு, மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், நிர்வாகிகள் நி ர்மல்குமார், வெங்கடேசன், ராமதாஸ், செல்வமணி, அன்புக்குமரன், பாபு, ரகுநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் கணேசன் பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதியிலும் தி.மு.க., வெல்லும். டெல்டா மண்டலத்தின் 41 தொகுதியிலும் வெல்வோம்,' என்றார்.

அமைச்சர் நேரு பேசுகையில், 'தமிழகத்தில், 2வது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும். கருணாநிதியை விட சிறந்த ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்குகி றார்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us