/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துார் வாரும் பணி : கிடப்பில் தி.மு.க., கவுன்சிலர் மனு
/
துார் வாரும் பணி : கிடப்பில் தி.மு.க., கவுன்சிலர் மனு
துார் வாரும் பணி : கிடப்பில் தி.மு.க., கவுன்சிலர் மனு
துார் வாரும் பணி : கிடப்பில் தி.மு.க., கவுன்சிலர் மனு
ADDED : நவ 13, 2025 10:51 PM

புவனகிரி: குளத்தை புனரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புவனகிரி பேரூராட்சி ஆதிவராகநத்தம் வார்டு, 15 ல், மொத்தம், 7 ஏக்கர் பரப்பளவில் இலுப்பைகுளம் உள்ளது. இந்தக்குளம் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
மழைக்காலங்களில் குளத்தில் தண்ணீரை தேக்கி நிலத்தடி மட்டத்தை உயர்த்தினர். சுற்று பகுதி மக்கள் குளிப்பது உள்ளிட்ட இதர தேவைகளுக்கு, இந்த நீரை பயன்படுத்தினர். காலப்போக்கில் ஆக்கிரமிப்பினால் குளம் துார்ந்து பரப்பளவு குறைந்தது.
அப்பகுதி மக்கள் கோரிக்கையின், பேரில் குளத்தை துார்வாரி ஆழப்படுத்திட, கரைகளை உயர்த்தி புனரமைத்தல் மற்றும் நடைபாதை அமைக்க, அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 2023-2024 ம் நிதியாண்டில் ரூ. 75 இலட்சம் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது.
ஒப்பந்த காலம் முடிந்துள்ள நிலையில் புனமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் வரிப்பணம் ரூ.75 லட்சம் விரையமாகி உள்ளது. உயரதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சார்பில், தி.மு.க., கவுன்சிலர் செல்லப்பாண்டியன் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த சேர்மன் பதவியில் இருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த, கவுன்சிலரே கோரிக்கை
மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

