/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க.,விற்கு மக்களை பற்றி கவலையில்லை அ.தி.மு.க., பாசறை செயலாளர் பரமசிவம் பேச்சு
/
தி.மு.க.,விற்கு மக்களை பற்றி கவலையில்லை அ.தி.மு.க., பாசறை செயலாளர் பரமசிவம் பேச்சு
தி.மு.க.,விற்கு மக்களை பற்றி கவலையில்லை அ.தி.மு.க., பாசறை செயலாளர் பரமசிவம் பேச்சு
தி.மு.க.,விற்கு மக்களை பற்றி கவலையில்லை அ.தி.மு.க., பாசறை செயலாளர் பரமசிவம் பேச்சு
ADDED : மே 15, 2025 11:44 PM

சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், துணை செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் பேசுகையில்' 'மாவட்ட மருத்துவக் கல்லுாரியில் போதிய டாக்டர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லை. ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில், 11 மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டு பல்வேறு மருத்துவர்களை நியமித்து சாதனை படைத்தோம்.
முன்னாள் முதல்வர் ஜெ., நிதி சிக்கலில் இருந்த அண்ணாமலைப் பல்கலைழக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை அரசு கல்லுாரியாக மாற்றினார். கடந்த காலங்களில் பல வசதிகள் நிறைந்த மருத்துவனையாக இருந்ததால், அனைத்து இடங்களிலும் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்தனர்.
ஆனால் தற்போது தி.மு.க., பொறுப்பேற்ற பின்பு, மற்ற மருத்துவனைக்கு நோயாளிகளை பரிந்துரை செய்யும் மருத்துவனையாக மாறியுள்ளது. உயிர் காக்கும் இருதய மருத்துவர், நரம்பியல் சிகிச்சை மருத்துவர் இல்லை.
சிதம்பரம் பஸ் நிலையத்தில் பசுமை பந்தல் அமைக்காததால் மக்கள் அவதியடைகின்றனர். நகராட்சி அனுமதி அளித்தால் பாண்டியன் எம்.எல்.ஏ., சொந்த செல்வில் பசுமை பந்தல் அமைக்க தயாராக உள்ளார். 4 ஆண்டு ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லுாரி கூட கட்டி முடிக்கவில்லை. தி.மு.க., அரசுக்கு மக்களை பற்றி கவலை இல்லை' என்றார்.