ADDED : ஜூலை 13, 2025 12:38 AM

பரங்கிப்பேட்டை, : சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை ஊராட்சியில் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் நல்லதம்பி, ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் தொகுதி பொறுப்பாளர் பாரிபாலன், ஒன்றிய பொறுப்பாளர் சத்திய நாராயணன் பேசினர்.
கூட்டத்தில், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ராகவன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணிஅமைப்பாளர்கள் காதர் மஸ்தான், சுபாகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்புச்செல்வன், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சிவலோகம், சேரமன்னன், நீலமேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.சிதம்பரத்திற்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.