/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் 'சுறுசுறுப்பு'
/
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் 'சுறுசுறுப்பு'
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் 'சுறுசுறுப்பு'
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் 'சுறுசுறுப்பு'
ADDED : நவ 04, 2025 10:05 PM
சி தம்பரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல் பணியில், தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள தி.மு.க., வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ளசட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடிகர் விஜய் கட்சியை துவக்கி, மாநாடு நடத்திய பிறகு, தி.மு.க., தலைமை கட்சியை பலப்படுத்தி, மீண்டும்ஆட்சியை பிடிக்க கட்சி நிர்வாகிகளிடம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தமிழக முழுவதும் 234சட்டசபை தொகுதிகளுக்கும், தனித்தனியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. சிதம்பரம் சட்டசபை தொகுதியை பொருத்தவரை,
கடந்த 2 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க., நேரடியாக போட்டியிட்டும், கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியும், குறைந்த ஓட்டுகளிலேயே வெற்றி வாய்ப்பு பறிபோனது.
அதனால் வரும், 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில், தேர்தலில் தி.மு.க., நேரடியாக போட்டியிடவேண்டும் என தொகுதி முழுவதும் நடந்த நிர்வாகிகள் கூட்டங்களில் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்து பேசினர்.
சிதம்பரம் தொகுதியில் மொத்தம் உள்ள 260 பூத்திற்கு, 10 பூத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், பூத் நிலைஏஜெண்ட், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், 100 ஓட்டுக்கு ஏஜெண்ட் என நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 100 ஓட்டுஏஜெண்ட், அந்த பகுதியில், யார், யார் எந்த கட்சியை சேர்ந்தவர், அவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள், அந்தபூத்தில் அதிகப்படியான ஓட்டுகளை பெற, அரசியல் கட்சியில் செல்வாக்கு உள்ள முக்கிய நபர், அரசியல்கட்சிகளில் இல்லாமல் மக்கள் செல்வாக்கு உள்ள நபர், குறித்து கணக்கொடுக்கும் பணி துவங்கி உள்ளனர்.
மேலும், சிதம்பரம் தொகுதி முழுவதும், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது.தேர்தல் நெருங்கி வருவதால், சிதம்பரம் தொகுதியில் தற்போது, தி.மு.க., நிர்வாகிகள்தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் பணி சூடு பிடித்து வருகிறது.

