/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருடனை புடிச்சு கொடுங்க: போலீசார் பதிலால் பாதிக்கப்பட்டவர்கள் 'ஷாக்'

ADDED : நவ 04, 2025 10:22 PM
கடலுார் செம்மண்டலம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ஒருவர், தனது கடையின் முன் அதிகாலையில் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகளை மர்மநபர்கள் திருடி செல்வதாக போலீசில் புகார் அளித்தார்.
அதற்கு போலீசார், திருடும் நேரத்தில் காத்திருந்து, திருடனை பிடிச்சிட்டு வந்து போலீஸ்நிலையத்தில் ஒப்படைங்க என்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர், திருடு போவதை கண்டறிய சி.சி.டி.வி.,கேமராக்களை பொருத்தி கண்காணித்தார்.
அதன்பின் திருடு போவதை பதிவு செய்த காட்சிகளுடன் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். அப்போது கிரைம் போலீசாரை பாருங்க எனக்கூறி தட்டிக்கழித்தனர்.
அதேபகுதியில் கடந்த சில மாதங்களில் இரண்டு கடைகளில் பட்டப்பகலில் கல்லாப்பெட்டியில் இருந்த பணமும் திருடு போய் உள்ளது.
அடுத்தத்து திருட்டு சம்பவங்கள் தொடர்ந்தாலும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார், புகார் கொடுப்பவர்களிடமே திருடனை பிடித்து தரச்சொல்வது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.