/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க கூட்டம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க கூட்டம்
ADDED : ஜன 03, 2026 04:58 AM

கடலுார்: கடலுார் முதுநகரில் நடந்த என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி பாகநிலை முகவர்கள் செயற்திறன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி தி .மு.க., அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். மாநகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மகளிருக்கான விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் சுனாமி, கொரோனா காலங்களில் தி.மு.க., அரசின் மக்களுக்கான செயல்பாடுகள், உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் ஒரே நேர் கோட்டில் உழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் தி.மு.க,.அரசின் சாதனை விளக்க துண்டுபிரசுரங்கள், தமிழ்நாடு தலைகுனியாது ஸ்டிக்கர் வினியோகம் செய்யப்பட்டது. கிளை செயலாளர் அன்பு, வழக்கறிஞர் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன், பகுதி நிர்வாகிகள் ராஜேந்திரன், சண்முகம், ரகுராமன் மற்றும் பகுதி செயலாளர்கள், பாகநிலை முகவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

