/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழாய் உடைந் து கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் அவதி
/
குழாய் உடைந் து கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் அவதி
குழாய் உடைந் து கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் அவதி
குழாய் உடைந் து கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் அவதி
ADDED : ஜன 03, 2026 04:57 AM

கடலுார்: பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கடலுார் வண்ணாரப்பாளையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் செல்லும் பாதையில் பெரிய அளவிலான பாதாள சாக்கடை குழாய் செல்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. அப்போது தற்காலிகமாக அருகில் உள்ள பாதாள சாக்கடை குழாய் வழியாக இணைத்து தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. தற்போது மற்றொரு இடத்தில் உடைப்பு எடுத்து கழிவுநீர் வேகமாக வெளியேறியது. இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
மேலும் அப்பகுதியில் யாரும் வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கம் போல் மாநகராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயிலிருந்து மற்றொரு குழாய்க்கு ஜெனரேட்டர் மூலமாக தண்ணீர் வெளியேற்றும் பணியை தொடங்கினர்.
அப்போது அப்பகுதி மக்கள் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே நிலை நீடித்து வந்தால் போராட்டம் நடத்த வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தனர்.

