/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களுக்காக போராடிய கட்சி தி.மு.க.,: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
/
மக்களுக்காக போராடிய கட்சி தி.மு.க.,: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
மக்களுக்காக போராடிய கட்சி தி.மு.க.,: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
மக்களுக்காக போராடிய கட்சி தி.மு.க.,: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : ஏப் 29, 2025 07:18 AM

ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஸ்ரீமுஷ்ணத்தில் பொதுக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, கோவிந்தராஜன், செந்தில்குமார், பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி, இளம் பேச்சாளர் தமிழ்மணி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'தி.மு.க., 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி ஆட்சியமைத்துள்ளது.
மக்களுக்காக பல முறை சிறை சென்று போராடியதால் தி.மு.க., ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது.
ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரே கட்சியில் இருந்தால் வாரிசு அரசியல் என்கிறார்கள். தற்போது கட்சி ஆரம்பித்தவர்கள், கலாச்சாரத்தை சீரழித்தவர்கள் எல்லாம் முதல்வராக ஆசைப்படுகிறார்கள்.
பிளாக்கில் சம்பளம் வாங்குபவர்கள் ஊழலற்ற ஆட்சி அமைப்பதாக கூறுகிறார். சினிமா செட்டிங் போட்டு அரசியல் செய்கின்றனர். இதில், இளைஞர்கள் ஏமாறவேண்டாம்' என்றார்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாநில அயலக அணி விஜயன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி தலைவர் முத்துராமலிங்கம், விளையாட்டு அணி அமைப்பாளர் சதீஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் சத்தியநாராயணன், பேரூராட்சி துணை சேர்மன் முத்தமிழரசிபார்த்திபன், இளைஞரணி வீரவேல், அமைப்பாளர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயச்சந்துரு நன்றி கூறினார்.