/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., ஐ.டி., அணி ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., ஐ.டி., அணி ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 08, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பேரூர் செயலர் செல்வம், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். இதில், விருத்தாசலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சுபா சந்திரசேகர் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட பிரதிநிதிகள் சேகர், குழந்தை சுதந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், பேரூர் நிர்வாகிகள் குருராஜன், கணேசன், சோழ பிரகாஷ உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சேனல் அறிமுகம் செய்யப்பட்டது.

