/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 31, 2025 04:29 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பூதாமூரில் நகர தி.மு.க., சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகர பொருளாளர் மணிகண்டன், மாவட்ட தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தளபதிகுமார், செந்தில்குமார், நகராட்சி கவுன்சிலர் அருள்விழி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப அணி சேனல் அறிமுகம் செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சபா, மாவட்ட பிரதிநிதி சரவணன், வார்டு செயலர் ராஜா, நகர தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் விக்கி, பூவராகவன், பாபு கணேஷ், வினோத், ராமஜெயம், பழனி, ஆனந்தன் பங்கேற்றனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அணை அமைப்பாளர் முத்துக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.