/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., சாதனைகளை ஓட்டுகளாக மாற்ற வேண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
/
தி.மு.க., சாதனைகளை ஓட்டுகளாக மாற்ற வேண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
தி.மு.க., சாதனைகளை ஓட்டுகளாக மாற்ற வேண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
தி.மு.க., சாதனைகளை ஓட்டுகளாக மாற்ற வேண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : பிப் 17, 2024 06:29 AM

கடலுார் : கடலுாரில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம் வரவேற்றார். அவைத் தலைவர் பழனிவேல், துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: கடலுார் லோக்சபா தொகுதியில் எந்த வேட்பாளர் நின்றாலும் 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
கடலுார் மாவட்டத்தில் 75 சதவீத பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுகின்றனர். கல்லுாரி மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
டில்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கக் கூடாது. பா.ஜ., கருப்பு பணத்தை மீட்கவில்லை. தமிழக முதல்வர் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். வீடு வீடாக மக்களிடம் தி.மு.க.,வின் சாதனைகளை எடுத்துக் கூறி ஓட்டுகளாக மாற்ற வேண்டும்' என்றார்.
அமைச்சர் கணேசன் பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்து வருகிறார். ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கினார். ஆறரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து, 26 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளார்' என்றார்.
முன்னதாக, எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, தொகுதி பொறுப்பாளர் அங்கையற்கண்ணி, மாநகர மேயர் சுந்தரி ராஜா பேசினர். ஒன்றிய செயலாளர் தனஞ்ஜெயன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.