/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 06, 2025 05:24 AM

பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் வார்டு செயலாளர்கள், ஓட்டுச்சாவடி நிலை முகவர் 2, ஓட்டுச்சாவடி இணையதள முகவர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தட்டாஞ்சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ள எஸ்.ஐ.ஆர்., நடைமுறை, வாக்காளர் சேர்க்கை, திருத்தம், சரி பார்க்கும் பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன், நகர அவைத்தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கவுரி அன்பழகன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணிசந்தர், பண்ருட்டி சட்டசபை தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் நாராயணன், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

