ADDED : டிச 08, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுாரில் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் முஸ்தாக்தீன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மதார்சா, ரஹீம், இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்டத் தலைவர் ஷேக் தாவூத் வரவேற்றார். மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் அமீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் முஸ்தபா கண்டன உரையாற்றினர்.