ADDED : டிச 20, 2024 11:40 PM

கிள்ளை:கிள்ளை அடுத்த மேலச்சாவடியில் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பொன்னுசாமி, இளவரசு, ஒன்றிய கவுன்சிலர்கள் மோகன்தாஸ், ஜெயந்தி சாமிதுரை, மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சுப்பு வெங்கடேசன், சிவலோகம், காதர் மஸ்தான், சேரமன்னன், பாலகுரு, நீலமேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பரங்கிப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் துணை சேர்மன் செழியன், நகர அவைத் தலைவர் தங்கவேல், முன்னாள் நகர செயலாளர்கள் முனவர் உசேன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முத்துப்பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

