/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., ஆர்ப்பாட்டம் : அமைச்சர் பங்கேற்பு
/
தி.மு.க., ஆர்ப்பாட்டம் : அமைச்சர் பங்கேற்பு
ADDED : மார் 30, 2025 04:47 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூரில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், அவைத் தலைவர் சின்னப்பா, நகர செயலாளர் கணேசமூர்த்தி, இலக்கிய அணி நிர்வாகிகள் பழனிச்சாமி, குமாரராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குள்ளஞ்சாவடி: ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகராட்சி தலைவர் சிவக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட தொழிலாளர் அணி தண்டபாணி, அன்பழகன், ஆறுமுகம், ராஜா, வெற்றிவேல், ராஜா, சிவக்குமார், ராஜபாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி கவுதம், ஸ்டாலின், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.