/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொது கூட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொது கூட்டம்
ADDED : பிப் 10, 2025 06:28 AM
கடலுார் : கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து வடலுாரில் பொதுக் கூட்டம் நடந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். குஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.
மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமுத்து, சக்திவேல், சுதா சம்பத், ஒன்றிய செயலாளர்கள் நாராயணசாமி, காசிராஜன், சுப்பிரமணியன், வடலுார் நகர செயலாளர் தமிழ்செல்வன், நகராட்சி சேர்மன் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயலாளர் சங்கர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர்.
தலைமை பேச்சாளர்கள் சங்கர், செந்தமிழ்ச்செல்வன் பேசினர்.
கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப அணி ஜாபர் அலி, மகளிரணி அமுதராணி, மகளிர் தொண்டரணி மனோரஞ்சிதம், நெசவாளர் அணி நல்லதம்பி, அயலக அணி வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றி கூறினார்.