/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., 215 தொகுதிகளில் வெல்லும் அமைச்சர் கணேசன் பேச்சு
/
தி.மு.க., 215 தொகுதிகளில் வெல்லும் அமைச்சர் கணேசன் பேச்சு
தி.மு.க., 215 தொகுதிகளில் வெல்லும் அமைச்சர் கணேசன் பேச்சு
தி.மு.க., 215 தொகுதிகளில் வெல்லும் அமைச்சர் கணேசன் பேச்சு
ADDED : நவ 26, 2024 06:48 AM
கடலுார்: ஸ்டாலினுக்கு உறுதுணையாக உதயநிதி இருப்பதால், 2026 சட்டசபைத் தேர்தலில் 215 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என, அமைச்சர் கணேசன் பேசினார்.
கடலுாரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது;
முதல்வருக்கு உறுதுணை யாக துணை முதல்வர் உதயநிதி தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். துணை முதல்வர் உதயநிதியை இளைஞர்கள் எல்லாரும் உதயநிதி அல்ல தங்கள் இதயநிதி என சொல்லக்கூடிய அளவில் செயல்பட்டு வருகிறார்.
உதயநிதி விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் தமிழக வீரர்கள் கலந்து கொண்டு 21 தங்கப்பதக்கம் உட்பட 62 பதக்கங்கள் பெற வைத்துள்ளார்.
கேலோ இந்தியா போட்டியில் தமிழக வீரர்கள் கலந்து கொண்டு 92 பதக்கங்களை பெற்று இந்தியாவில் இரண்டாவது இடம் பிடித்தனர். இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் தமிழகம் முதலிடம் என்ற நிலையை உருவாக்கியுள்ளார். ஒரு ஆண்டில் 375 விளையாட்டு வீரர்களுக்கு 8.6 கோடி ரூபாய் நிதியுவி வழங்கியுள்ளார்.
முதல்வருக்கு, உறுதுணையாக உதயநிதி இருப்பதால் 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகள் அல்ல 215 தொகுதிகளில் தி.மு.க., வென்று ஆட்சி பிடிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.