/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க.,வின் ஊதுகுழல் நடிகர் விஜய்; :அர்ஜூன் சம்பத் பேட்டி
/
தி.மு.க.,வின் ஊதுகுழல் நடிகர் விஜய்; :அர்ஜூன் சம்பத் பேட்டி
தி.மு.க.,வின் ஊதுகுழல் நடிகர் விஜய்; :அர்ஜூன் சம்பத் பேட்டி
தி.மு.க.,வின் ஊதுகுழல் நடிகர் விஜய்; :அர்ஜூன் சம்பத் பேட்டி
ADDED : ஏப் 28, 2025 06:09 AM

கடலுார் : நடிகர் விஜயை மக்கள் புறக்கணிப்பார்கள் என, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து காஷ்மீர் மற்றும் மேற்குவங்கத்தில் கொல்லப்பட்ட இந்துக்களின் ஆன்மா சாந்தியடைய வேண்ட சிறப்பு பிரார்த்தனை மற்றும் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீரில் கல்வி, வியாபாரம், சுற்றுலா மேம்பாடு அடைந்து வந்தநிலையில் பொறுத்துக்கொள்ள முடியாத அழிவு சக்திகள் உள்நோக்கத்தோடு தாக்குதலை நடத்தியுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு காங்., உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவாக உள்ளன.
மேற்கு வங்கமாநிலத்திலும் வக்பு எதிர்ப்பு போராட்டத்தில் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீர், மேற்கு வங்கத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில்கட்டுமானப்பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே உள்ளது. மற்ற மாநிலங்களை விட சிமெண்ட், மணல், ஜல்லிபோன்றவற்றின் விலை அதிகமாக உள்ளது. இதனால் 60லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
விலையைகட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மந்திரிகளை வைத்துக்கொண்டு அரசை நடத்துவது அவமானம்.கவர்னரே தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
துணைவேந்தர் பதவி கோடிக்கணக்கில்ஏலம் விடப்பட்டது. அதை தடுக்கும் வகையில் கவர்னரின் செயல்பாடு இருந்ததால் அவரை மிரட்டுகிறார்கள்.பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வி துறை முற்றிலுமாக சீரழிந்துவிட்டது.
வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணிஉருவாகியுள்ளது. 2026ல் திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு தயாராகி வருகிறது. தி.மு.க.வின் 'ஏ' டீமாக நடிகர்ஜோசப் விஜய் செயல்படுகிறார். தி.மு.க.வின் ஊதுகுழலான அவரை மக்கள் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

