/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மெய்ஞான அறக்கட்டளை சார்பில் மருத்துவர்கள் தினம்
/
மெய்ஞான அறக்கட்டளை சார்பில் மருத்துவர்கள் தினம்
ADDED : ஜூலை 03, 2025 11:26 PM

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த ஒரத்துாரில் மெய்ஞான அறக்கட்டளை சார்பில் டாக்டர்கள் தின விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ஞானசுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஓமியோபதி மருத்துவர்கள் குபேரன், யுகவாணி முன்னிலை வகித்தனர். ஜெகஜோதி பிரகாஷா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் புவனகிரி கதிரவன் மருத்துவமனை டாக்டர் கதிரவன், புதுச்சேரி மருத்துவர் திருமேணி ஆகியோர் பல்வேறு மருத்துவர்களின் சேவையை பாராட்டி, சான்றிதழ் வழங்கி பேசினர்.
நிகழ்வில், மரபு வழி மருத்துவர்கள் சாதித், பிரவீன், செம்மூன்சன், செல்வகுமார், நாகவேல், ஹிஜாமா மருத்துவர் நாசர், நீரோ தெரபிஸ்டுகள் ஹரி, தினேஷ், விமல், சண்முகம், கவியரசு, சக்திவேல், பிரியா, தில்லைக்கரசி, நந்தினி மற்றும் இயற்கை ஆர்வலர்கள், சித்த மருத்துவர்கள், ஓமியோபதி மருத்துவர்கள் பங்கேற்றனர். சுதாகர் நிழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இளவரசன் நன்றி கூறினார்.