நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த நரிமேடு பஸ் நிறுத்தத்தில் தெரு விளக்குகள் எரியாததால், இரவில் மக்கள் அச்சமடைகின்றனர்.
பண்ருட்டி அடுத்த நரிமேடு பஸ் நிறுத்தத்தில் நரிமேடு, சன்னியாசிப்பேட்டை, ஏழுமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பஸ் ஏறி தினமும் வெளியூர்களுக்கு சென்று வருகின் றனர்.
பஸ் நிறுத்தத்தில் தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.
இதனால், மக்கள் அச்சமடைகின்றனர். எனவே, அங்கு தெரு விளக்குகளை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.