/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை நாய் கடித்ததால் உரிமையாளர் மீது வழக்கு
/
பெண்ணை நாய் கடித்ததால் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : நவ 27, 2025 05:09 AM
சேத்தியாத்தோப்பு: -: சேத்தியாத்தோப்பு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை நாய் கடித்த விவகாரத்தில், நாயின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த தட்டானோடை மேற்கு தெருவை சேர்ந்த பஞ்சமூர்த்தி மனைவி தனலட்சுமி, 47; இவர் கடந்த, 9 ம் தேதி வீட்டிலிருந்து செல்வராஜ், வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, செல்வராஜ் வளர்த்து வந்த நாய் கடித்தது.
காயமடைந்த தனலட்சுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தடுப்பூசி போட்டு வருகிறார். இந்த சிகிச்சைக்கான செலவினை ஏற்றுக்கொண்டு நாயை, அப்புறப்படுத்தி கொள்வதாக செல்வராஜ் கூறினார்.
ஆனால், சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி சிகிச்சைக்கான, செலவு தொகையை செல்வராஜிடம் கேட்ட போது அவர் தர மறுத்துள்ளார். நாயையும் அப்புறப்படுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார், நாய் உரிமையாளர் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

