/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் நாய்கள் தொல்லை; பொதுமக்கள் கடும் அவதி
/
கடலுாரில் நாய்கள் தொல்லை; பொதுமக்கள் கடும் அவதி
ADDED : அக் 07, 2025 12:27 AM

கடலுார்; கடலுார் மாநகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
கடலுாரின் மையப்பகுதியான மைதானத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்களை சாகடிப்பதற்கு பதில் அவற்றிக்கு கருத்தடை செய்ய வேண்டும் என புளுகிராஸ் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
ஆனால், மாநகராட்சியில் நாய்களை பிடித்து கருத்தடை செய்யவில்லை. அதனால் நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிப்பது சட்டப்படி கு ற்றம் என கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
கோர்ட் உத்தரவை உதாசினப்படுத்திவிட்டு டீக்கடைகளில் விற்பனை செய்யப்படும் பிஸ்கட்டுகளை வாங்கி போடுகின்றனர். இதனால் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டு அருகில் நின்றிருப்பவர்களை கடித்து விடுகிறது.
முன்பின் தெரியாதவர்கள், ெஹல்மட் அணிந்து வாக னங்களில் செல்வோர்கள், கருப்பு உடை அணிந்து செல்வோர் என பலரும் தெருநாய்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். கடலுார் மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கம் போன்றவை நாய்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது.
விளையாட்டு வீரர்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்கள் நாய்களுக்கு நல்ல உணவாக உள்ளது. இதனால் அதிகளவு இனப்பெருக்கம் ஏற்பட்டு மைதானம் முழுவதும் திரும்பிய இடமெல்லாம் நாய்களாக உள்ளன.
பலர் நாய்க்கடிபட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் நாளொன்றுக்கு சராசரியாக 5க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மன, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.