/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரியை துார்வாராததால் தண்ணீரை சேமிக்க முடியாத அவலம் நீடிப்பு
/
ஏரியை துார்வாராததால் தண்ணீரை சேமிக்க முடியாத அவலம் நீடிப்பு
ஏரியை துார்வாராததால் தண்ணீரை சேமிக்க முடியாத அவலம் நீடிப்பு
ஏரியை துார்வாராததால் தண்ணீரை சேமிக்க முடியாத அவலம் நீடிப்பு
ADDED : அக் 07, 2025 12:27 AM

புவனகிரி; புவனகிரி அருகே ஏரிகள் துார்ந்துள்ளதால் மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் தண்ணீரை சேத்தியாத்தோப்பு வாலாஜா ஏரியில் தேக்கி பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் புவன கிரி அடுத்த சொக்கன் கொல்லை, குமுடிமூலை, நத்தமேடு ஏரிகளில் தேக்கி வைக்கப்படுகிறது.
பின், சாத்தப்பாடி ஏரியில் தண்ணீரை தேக்கியும், அங்கிருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் திறந்தும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், கடந்தாண்டு மேல்புவனகிரி ஒன்றியத்தில் 10,000 எக்டர் சம்பா நடவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சொக்கன்கொல்லை, குமுடி மூலை, நத்தமேடு உள்ளிட்ட ஏரிகள் துார்ந்துள்ளது. இதன் காரணமாக மழைக் காலங்களில் ஏரியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகாமல் இருக்க கடலில் வீணாக திறந்து விடப்படுகிறது.
இதுபோன்ற நிலை ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இதனால் நவரை பட்டத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கடும் அவதியடைகின்றனர்.
ஏரியை துார்வாராத நிலையில், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இருந்தும் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.