ADDED : செப் 11, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
புவனகிரியைச் சேர்ந்தவர் சாந்தாபாய், 90; உடல் நலக்குறைவால் இறந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகத் தலைவர் ராமச்சந்திரன், புவனகிரி அரிமா சங்க தலைவர் பக்தாரம், செயலாளர் பாபுலால், பொருளாளர் பிரகாஷ், கண்தான கமிட்டி நிர்வாகிகள் மகாலிங்கம், துரைராஜ் மற்றும் புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்று இறந்தவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் சாந்தாபாயின் இரு கண்களையும் தானமாக பெற்றனர்.
தொடர்ந்து, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.