/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் கோவிலில் ரூ.1.26 லட்சம் காணிக்கை
/
பெண்ணாடம் கோவிலில் ரூ.1.26 லட்சம் காணிக்கை
ADDED : மார் 14, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.1.26 லட்சம், பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.
பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் செயல் அலுவலர் மகாதேவி முன்னிலையில், கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 1 லட்சத்து 26 ஆயிரத்து 968 ரூபாய் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

