/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம்; பேரூராட்சி கவுன்சிலர்கள் பகிரங்க பேச்சு
/
எங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம்; பேரூராட்சி கவுன்சிலர்கள் பகிரங்க பேச்சு
எங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம்; பேரூராட்சி கவுன்சிலர்கள் பகிரங்க பேச்சு
எங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம்; பேரூராட்சி கவுன்சிலர்கள் பகிரங்க பேச்சு
ADDED : நவ 27, 2024 07:36 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே, ''எங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம், பணிகளை முறையாக செய்தால் போதும்'' என, பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கூட்டம் தலைவர் ஜெயமூர்த்தி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் சண்முகசுந்தரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் அர்ஜூனன் பேசும்போது, 'மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தில் சாலைகள் வீணாகியுள்ளது. கால்வாய் பணி முறையாக நடக்கவில்லை' என, சரமாரியாக குற்றம் சாட்டினார்.
தி.மு.க., கவுன்சிலர் இலியாஸ் பேசுகையில், 'புதிதாக போட்ட குடிநீர் பைப்கள் பல இடங்களில் உடைந்துள்ளது. பணிகள் தரமில்லை' என்றார். அதற்கு பதிலளித்த தலைவர், 'பணிகள் தரமில்லாவிட்டால் கவுன்சிலர்களே பணியை தரமாக செய்ய வலியுறுத்தலாம்' என்றார்.
தொடர்ந்து, வி.சி, கட்சி இதிரிஸ் மற்றும் அ.தி.மு.க, கவுன்சிலர் அர்ஜூனன் ஆகியோர், 'பணிகளை தரமாக செய்தால் போதும், எங்களுக்கு லஞ்சம் கொடுத்து, கெடுக்க வேண்டாம்' என, வெளிப்படையாக பேசினர்.
அதை தொடர்ந்து பேசிய தலைவர், 'இனி யாருக்கும் பணம் தரமாட்டோம். இனி 100 சதவீதம் பணி தரமாக நடக்கும்' என்றார். பேரூராட்சி மன்ற கூட்டத்தில், லஞ்சம் தர வேண்டாம் என, கவுன்சிலர்கள் பேசியதும், அதற்கு தலைவர் பதில் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுன்சிலர் மீது தலைவர் பாய்ச்சல்
பேரூராட்சி கூட்டம் முடிந்து வெளியே வந்த தலைவர் ஜெயமூர்த்தி, 'அ.தி.மு.க., ஆட்சியில் தான் பேரூராட்சி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டீர்கள்' என கோபமாக அ.தி.மு.க., கவுன்சிலர் அர்ஜூனனிடம் கூச்சல் போட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபத்தின் உச்சிக்கு சென்ற தலைவர் ஜெயமூர்த்தி, அ.தி.மு.க., கவுன்சிலர் அர்ஜூனனை பிடித்து தள்ளினார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.