/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பேட்டி
/
கடலுார் தொகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பேட்டி
கடலுார் தொகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பேட்டி
கடலுார் தொகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பேட்டி
ADDED : டிச 19, 2024 06:52 AM

கடலூர்; கடலுார் சட்டசபை தொகுதியில் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டாம் என அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
கடலுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை முதல்வர் இரண்டு முறை வந்து தேவையான உதவிகளை வழங்கினார். நானும் என்னால் முடிந்த உதவிகளை தொகுதி மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறேன்.
கடலுார் மாநகராட்சியில் 14 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு வடிகால் வாய்க்கால் பணி, அழகியநத்தம், வெள்ளப்பாக்கம் பகுதியில் 3 கோடியே 9 லட்சம் ரூபாயில் தடுப்பணை, மலட்டாறு கரைகளை உயர்த்தி , கான்கிரீட் சுவர் அமைக்க 6 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அழகியநத்தம் , மஞ்சக்குப்பம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேணுகோபாலபுரம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட 1 கோடியே 93 லட்சம் ரூபாயும் , துாக்கணாம்பாக்கம் பள்ளிக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் மாதிரி பள்ளி கட்டடம் கட்ட 56.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் அமைக்க 7.6 கோடியும் கடலுார் சில்வர் பீச் மேம்படுத்த 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடலுார் சட்டசபை தொகுதியில் இவ்வளவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிலர் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

