/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதற்றம் வேண்டாம் கலெக்டர் 'அட்வைஸ்'
/
பதற்றம் வேண்டாம் கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : மார் 20, 2024 05:11 AM

விருத்தாசலம் : தேர்தலை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் உள்ள 286 ஓட்டுச்சாவடி மையங்களுக்கான ஓட்டு இயந்திரங்கள், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை நேற்று, கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஜன்னல்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும். கதவுகள், சுற்றுச்சுவர், போலீஸ் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, 'தேர்தல் பணியில் பதற்றம் கூடாது, மகிழ்ச்சியோடு பணியாற்ற வேண்டும் என, அதிகாரிகளிடம் கூறினார். ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், தாசில்தார் உதயகுமார், தேர்தல் துணை தாசில்தார் முருகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

