ADDED : பிப் 28, 2026 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: வீட்டின் சுவரில் கூடு கட்டியிருந்த கத வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், சவலைதெருவில் வசித்து வருபவர் முனியன். இவரது வீட்டின் சுவற்றில் கதவண்டுகள் கூடு கட்டியிருந்தன.
இந்த கதவண்டுகள் கூடுகளை விட்டு வெளியில் வந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்தது.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்னர்.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கத வண்டுகளை அழித்தனர்.

