ADDED : ஆக 14, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாநகராட்சி, 3வது வார்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
கூட்டுறவுத்துறை சார்பில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கடலுார் மாநகராட்சி, 3வது வார்டில் தி.மு.க., மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மூத்த குடிமக்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கினார்.
வார்டு செயலாளர் சுப்பிரமணி, அஷ்ரப் அலி, விஷ்ணு, மணி, சிலம்பரசன், கார்த்தி, பரணிகுமார் உடனிருந்தனர்.