/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாழ்வாக செல்லும் மின் கம்பியால் பாதிப்பு
/
தாழ்வாக செல்லும் மின் கம்பியால் பாதிப்பு
ADDED : ஜன 22, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் தனியார் மிட்டாய் ஆலை மோரைத் தெருவில் உள்ளது.
இங்கு தினமும் பல லாரிகள் வந்து செல்கின்றன.இந்த தெருவில் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது.
இதனால் லாரிகள் செல்லும் போது மின்கம்பியில் உராய்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
மேலும் மின்சாதன பொருட்கள் பழுதாகிறது.எனவே இதை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திலும் மின்வாரிய அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளனர்.
உடனடியாக சரி செய்யாவிட்டால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

