/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரதட்சணை புகார்: கணவர் மீது வழக்கு
/
வரதட்சணை புகார்: கணவர் மீது வழக்கு
ADDED : மார் 07, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலுார், புதுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 31; இவரது மனைவி வைத்தீஸ்வரி, 26; திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. வைத்தீஸ்வரிக்கு, பெற்றோர் வீட்டில் வரதட்சணையாக 12 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை செய்தனர்.
இந்நிலையில், மேலும், 10 சவரன் நகை கேட்டு விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்தீஸ்வரியை துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து வைத்தீஸ்வரி நேற்று அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷ் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

