/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலக நுரையீரல் மாநாட்டில் டாக்டர் கலைக்கோவன் பங்கேற்பு
/
உலக நுரையீரல் மாநாட்டில் டாக்டர் கலைக்கோவன் பங்கேற்பு
உலக நுரையீரல் மாநாட்டில் டாக்டர் கலைக்கோவன் பங்கேற்பு
உலக நுரையீரல் மாநாட்டில் டாக்டர் கலைக்கோவன் பங்கேற்பு
ADDED : நவ 13, 2024 08:22 AM

கடலுார் : ஹாங்காங்கில்நடந்த உலக நுரையீரல் மருத்துவர்கள் மாநாட்டில், தமிழகத்திலிருந்து கடலுாரை சேர்ந்த டாக்டர் கலைக்கோவன் பங்கேற்றார்.
நுரையீரல் மருத்துவர்களுக்கானமாநாடு, ஹாங்காங் நாட்டில் நடந்தது. இதில்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நுரையீரல் நிபுணர்கள் பங்கேற்றனர்.நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, நிமோனியா, காற்று மாசுபாடு உள்ளிட்ட நுரையீரல் நோய்கள் பற்றி 4 நாட்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இதில் தமிழகத்திலிருந்து கடலுாரை சேர்ந்த நுரையீரல் நிபுணர் டாக்டர் கலைக் கோவன் பங்கேற்றார்.
இந்தியாவின் சார்பில், தமிழகத்தில் நுரையீரல் தொற்று கிருமிகள், நுரையீரல் புற்றுநோய் சம்பந்தமான கருத்துகளை டாக்டர் கலைக்கோவன் மாநாட்டில் எடுத்துரைத்தார். இந்தியா முழுவதிலும் இருந்து 15 நுரையீரல் நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
நவ., 7ம் தேதி முதல் நவ., 10 வரை நடந்த மாநாட்டில் பல மருத்துவ ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நுரையீரல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.