/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஞாபக மறதிக்கு காரணம் டாக்டர் பார்த்தீபன் விளக்கம்
/
ஞாபக மறதிக்கு காரணம் டாக்டர் பார்த்தீபன் விளக்கம்
ADDED : செப் 22, 2024 02:22 AM

கடலுார்: வயதனால் ஞாபக மறதி ஏற்படுவது அல்சீமர் டிமென்ஷியா நோயாக இருக்கலாம் என, கடலுார் மைன்ட் கேர் கிளினிக் மனநல மருத்துவர் பார்த்தீபன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மறதி நோய் (டிமென்ஷியா) என்பது மூளை தொடர்புடைய ஒரு நோய். இது ஒருவரின் நினைவாற்றல், சிந்திக்கும் திறன், கவனம், மொழித்திறன் போன்ற மூளையின் பல செயல்பாடுகளை பாதிக்கும் நோய். இதனை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நோயின் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்., 21ம் தேதி உலக அல்சீமர் டிமென்ஷியா தினமாக கொண்டாடப்படுகிறது.
65 வயதுக்கு மேலானவர்களுக்கு நரம்பு மண்டலத்தில் ஞாபகத்திற்கு தேவையான ரசாயனம் வேகமாக குறைவதால் அல்சீமர் டிமென்ஷியா நோய் வருகிறது.
சிலருக்கு மூளைக்கு போகும் ரத்த ஓட்டம் குறைபாடு, ஊட்டசத்து, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்நோய் வரலாம்.
நோயாளியின் மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை்க்குபின் உளவியல் பரிசோதனை, ரத்த பரிசோதனைகள், ஸ்கேன் மூலமாக நோயை கண்டறியலாம்.நோயின் காரணத்திற்கேற்ப சிகிச்சை முறை மாறுபடும்.
நினைவாற்றலை அதிகரிக்க மருந்துகளும், பயிற்சியும், துாக்கமின்மை மற்றும் குணநலன் மாற்றங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
குறிப்பாக, நோயாளியை பாதுகாப்பது பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவது மூலமாக நோயின் பாதிப்பை குறைத்து இயல்பு வாழ்க்கைக்கு வழிவகை செய்யலாம்.