/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
/
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
ADDED : டிச 19, 2025 06:09 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, கடந்த, 14ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இப்பணியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால், வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட, படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன.
தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை 10:00 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் முன்பு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல் காலத்தில் இன்று முதல் ஜன.,18 வரை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
வரும், 2026ம் ஆண்டு பிப்., 17 ம் தேதியன்று வெளியாக உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் படிவம்-6 மற்றும் பெயர், முகவரி திருத்தம் படிவம்-8 ஆகியவற்றை வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம். படிவங்களை இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

