/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
/
திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED : மார் 22, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விஜயமாநகரம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில், ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் புதுஆதண்டார்கொல்லை அரங்கை திரவுபதியம்மன், மகா கணபதி, ஸ்ரீகிருஷ்ணர், தர்மராஜா கோவில் தீமிதி திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. கடந்த 17ம் தேதி திருக்கல்யாணம், 20ம் தேதி தேரோட்டம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை அரவாண் களபலி, மாலை 6:00 மணிக்கு மேல், தீமிதி திருவிழா நடந்தது.
கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.