ADDED : ஜூன் 14, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி, : தர்மகுடிகாடு திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், வரும் 19ம் தேதி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.
திட்டக்குடி அடுத்த தர்மகுடிகாடு திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 19ம் தேதி, அர்ச்சுனர் வில் வளைத்தலை தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.
20ம் தேதி அல்லி திருக்கல்யாணம், 21ம் தேதி ராஜசூய யாகம், 24ம் தேதி அர்ச்சுனர் தபசு மரம் ஏறுதல், 27ம் தேதி தீமிதி திருவிழா, 29ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.