/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் போர்வெல் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
குடிநீர் போர்வெல் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 04, 2024 03:57 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தில், என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தில், 9 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் குடிநீர் போர்வெல் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
இந்த பணியை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் கதிரவன், தி.மு.க., ஒன்றிய செயலர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல், காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், தி.மு.க., கிளை செயலர்கள் தட்சிணாமூர்த்தி, கோவிந்தன், இளைஞரணி துணை அமைப்பாளர் பரமசிவம், முருகன், பழனிசாமி, வைத்தியநாதன், காங்., கட்சி நிர்வாகிகள் பிரபாகரன், ராஜீவ்காந்தி, ராஜூ, சிராஜூதீன் மற்றும் என்.எல்.சி., மண்ணியல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.