/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி தேவை
/
பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி தேவை
ADDED : ஏப் 21, 2025 06:33 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார்-திருச்சி, சிதம்பரம்-சேலம் மார்க்கத்தில் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் முக்கிய சந்திப்பு ஆகும். இவ்வழியாக, மதுரை, திருச்சி, சேலம், அரியலுார், விருத்தாசலம், சிதம்பரம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலையாகும்.
மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக காணப்படும். ஆனால் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கோடைகாலம் துவங்கிய நிலையில் பயணிகள் குடிநீர் கிடைக்கமால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடைகளில் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.