/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சொட்டு நீர் பாசனம் செயல் விளக்கம்
/
சொட்டு நீர் பாசனம் செயல் விளக்கம்
ADDED : மே 22, 2025 11:32 PM
நடுவீரப்பட்டு: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி கோட்டம் பொட்டவெளி கிராமத்தில் தானியங்கி சொட்டு நீர் பாசனம் குறித்து செயல் விளக்கக் கூட்டம் நடந்தது.
சர்க்கரை ஆலையின் முதுநிலை உபதலைவர் (கரும்பு) சங்கரலிங்கம், ஆலை பொது மேலாளர் மணிகண்ட வெங்கடேசன், மண்டல கரும்புத்துறை தலைவர் சுரேஷ்குமார், உதவி பொது மேலாளர்(கரும்பு) தேவராஜன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித்துறை தலைவர் ராஜேஸ்வரி, விரிவாக்கத் துறை தலைவர் மதிவாணன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட வேளாண்மை துறை இயக்குநர் (மாநில திட்டம்) விஜயராகவன், குறிஞ்சிப்பாடி வட்ட உதவி வேளாண்மை இயக்குநர் மலர்வாணன் பங்கேற்றனர். தானியங்கி தொழில்நுட்பம் குறித்து கல்டிவேட் நிறுவனத்தின் சி.இ.ஓ.,மல்லேஷ் பேசினார். ஏற்பாடுகளை கோட்ட அலுவலர் பாஸ்கர் செய்திருந்தார்.