/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிரைவர், கண்டக்டருக்கு 'பளார்'; பள்ளி மாணவர்கள் அட்டூழியம்
/
டிரைவர், கண்டக்டருக்கு 'பளார்'; பள்ளி மாணவர்கள் அட்டூழியம்
டிரைவர், கண்டக்டருக்கு 'பளார்'; பள்ளி மாணவர்கள் அட்டூழியம்
டிரைவர், கண்டக்டருக்கு 'பளார்'; பள்ளி மாணவர்கள் அட்டூழியம்
ADDED : பிப் 06, 2025 07:16 AM

விருத்தாசலம் ; படியில் தொங்கியதை கண்டித்த பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய பள்ளி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், எடையூரில் இருந்து விருத்தாசலத்திற்கு தடம் எண் 18 அரசு டவுன் பஸ், நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. மணவாளநல்லுார் பாபு, 50, பஸ்சை ஓட்டினார். எடையூர் சுப்ரமணியன், 56, கண்டக்டராக பணியில் இருந்தார்.
தொரவளூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் ஏறியுள்ளனர். அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்ததால், மேலே வருமாறு கூறிய கண்டக்டர் சுப்ரமணியனுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணவர்கள் மூவர், கண்டக்டர் சுப்ரமணியனை தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்ட டிரைவரையும் தாக்கிவிட்டு, கோமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தப்பியோடினர்.
இதனால் பஸ்சை கோமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வந்து, பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். தப்பியோடிய பள்ளி மாணவர்கள் மூவரை விருத்தாசலம் போலீசார் தேடி வருகின்றனர்.