/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பஸ் நிலையம்; திட்டக்குடியில் டிரைவர்கள், பயணிகள் அவதி

ADDED : ஆக 26, 2025 11:37 PM

தி ட்டக்குடி பஸ் நிலையத்தில் இடையூறாக நிற்கும் வாகனங்களால் பஸ் டிரைவர்கள், பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.
திட்டக்குடி நகராட்சியைச் சுற்றியுள்ள கோழியூர், தி.இளமங்கலம், கீழ் ச்செருவாய், இடைச்செருவாய், பெருமுளை, சிறுமுளை, புதுக்குளம், புலிவலம், இ.கீரனுார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அன்றாட தேவைகளுக்கு திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து விருத்தாசலம், கடலுார், திருச்சி, சென்னை, அரியலுார் உட்பட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பஸ் நிலைய வளாகத்தில் தள்ளு வண்டியில் அதிகளவில் காய்கறி கடைகள் உள்ளன.
அந்த தள்ளுவண்டி கடைகளுக்கு காய்கள் இறக்க வரும் வாகனங்கள் பஸ் நிலைய வளாகத்தில் இடையூறாக நிறுத்தி, 'பார்க்கிங்' ஏரியாவாக மாற்றி வருகின்றனர். இதனால் அரசு, தனியார் பஸ்கள் பஸ் நிலையத்தில் செல்ல முடிவதில்லை. பயணிகளும் அமர முடியாத நிலை உள்ளது.
கடந்த மாதம், அரியலுார் மாவட்டம், இடையக்குறிச்சியில் இருந்து திட்டக்குடி வந்த அரசு டவுன் பஸ் தடம் எண். 7 காய்கறி தள்ளுவண்டியின் மீது மோதியதில் சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, திட்டக்குடி பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தும் வாகனங்களை அகற்ற போலீசார், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.