நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்தவர் குமாரவேல் மகன் ராஜேஷ்குமார்,11; நகர் அரசு நடுநிலை பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் பள்ளி முடிந்து தனது நண்பர்களுடன் நகர் கிராமத்திலுள்ள 10 அடி ஆழ செம்மரக்குட்டையில் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்.
இதனை கண்ட அவரது நண்பர்கள் அப்பகுதியினரிடம் கூறி, மயக்க நிலையில் சிறுவனை மீட்டு, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர், ராஜேஷ்குமார் இறந்துவிட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

